திமுக பிரமுகர் கொலை வழக்கில் சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் சரண்

தாம்பரம் அருகே திமுக பிரமுகர் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய ஐந்து நபர்கள் தற்போது ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.

Update: 2024-03-02 10:12 GMT

நீதிமன்றத்தில் சரண் அடைந்தவர்கள்

தாம்பரம் அருகே திமுக பிரமுகர் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய ஐந்து நபர்கள் தற்போது ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.

சென்னை தாம்பரம் அடுத்த வண்டலூர் பகுதியில் வசித்து வருபவர் ஆறாமுதன் இவர் திமுக காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளராக தற்போது பதவி வகித்து வருகிறார் மேலும் வண்டலூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவராகவும் இருந்த இவர் வண்டலூர் சுற்றுவட்டார பகுதிகளில் திமுகவின் முக்கியமான ஒரு பிரமுகராகவும் இருந்து வருகிறார்.

இந்நிலையில் இன்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு வண்டலூர் மேம்பாலம் அருகில் உள்ள படப்பை செல்லும் பிரதான சாலையில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிறுத்தத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் ஏற்பாடுகளை பார்வையிடுவதற்காக நேற்று இரவு தனது காரில் வந்த போது திடீரென வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் ஆறாமுதன் வந்த காரின் மீது நாட்டு வெடிகுண்டை வீசியுள்ளனர்.

காரில் இருந்து இறங்கி தப்பியோடிய ஆற முதனை சூழ்ந்து கொண்டு பயங்கர ஆயுதங்களால் அவரை சரமாரியாக கை, கால், மற்றும் கழுத்து பகுதியில் வெட்டி சென்றனர். இதில் பலத்த காயம் அடைந்த ஆறாமுதனை மீட்டு குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு கூட்டிச் செல்லும் வழியில் ஆறாமுதன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தனிப்படையில் அமைத்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் தற்போது இந்த கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய சத்திய சீலன், முனீஸ்வரன், சம்பத்குமார், மணிகண்டன் மற்றும் 17 வயது சிறுவன் உட்பட ஐந்து நபர்கள் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று காலை சரணடைந்தனர். சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ள ஐந்து குற்றவாளிகளையும் சத்தியமங்கலம் குற்றவியல் நீதிபதி உமாதேவி அவர்கள் விசாரணை மேற்கொண்டார.

இதையடுத்து சத்திய சீலன், முனீஸ்வரன், சம்பத்குமார், மணிகண்டன் 4 வரையும் 6/03/ 2024 வரை கோபி சிறைச்சாலைக்கு நீதி மன்ற காவலுக்கு பலத்த போலீஸ் காவலுடன் அனுப்பி வைத்தனர். 17 வயது சிறுவனை செங்கல்பட்டு சிறுவர் நீதிமன்ற குழமத்திற்கு அனுப்பி வைத்தனர். கொலை வழக்கில் ஐந்து பேர் நீதிமன்றத்தில் சார் அடைந்தது சத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

Tags:    

Similar News