பிரதமரின் பேச்சுக்கு திமுக அஞ்சாது - கனிமொழி பதிலடி

Update: 2024-03-16 09:30 GMT

 கனிமொழி பதிலடி

திமுகவை அழித்து விடுவோம் என கூறியவர்களுக்கு கனிமொழி பதிலடி அளித்துள்ளார்.

திமுகவை அழித்து விடுவோம் எனக் கூறியவர்கள் எங்கே இருக்கிறார்கள் என தெரியவில்லை என்றும் பிரதமரின் பேச்சுக்கு திமுக அஞ்சாது எனவும் திமுக எம் பி கனிமொழி கூறியுள்ளார்.

பிரதமரின் பேச்சுக்கு திமுக ஒருபோதும் பயப்படாது. அடிக்கடி வந்தால் யாராவது வாக்களிப்பார்களா என்ற எண்ணத்தில் பிரதமர் தமிழ்நாடு வருகிறார். திரும்பத் திரும்ப தமிழ்நாடு வருவதனால் வாக்கு வங்கி அதிகரிக்கும் என முயற்சி செய்து வருகிறார்கள்.

Advertisement

இதனைப் பார்த்து பயப்பட வேண்டிய அவசியம் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு கிடையாது.

பிரதமர் மோடி தமிழில் பேசினால் மகிழ்ச்சிதான். நம்மைத்தான் ஹிந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறார்கள் தவிர வட இந்தியாவில் இருந்து வரும் எந்த தலைவர்களும் தமிழ் மொழியை கற்றுக் கொள்ளவில்லை.

வட இந்திய தலைவர்கள் ஏதாவது ஒரு தென்னிந்திய மொழியையாவது கற்றுக்கொள்ள வேண்டும் என எம் பி கனிமொழி கூறியுள்ளார்.

Tags:    

Similar News