திமுக இளைஞரணி மாநாட்டு பணி; அமைச்சர் புல்லட்டில் சென்று ஆய்வு
தி.மு.க. இளைஞர் அணி மாநாட்டு பணிகளை அமைச்சர் கே.என்.நேரு புல்லட்டில் சென்று ஆய்வு செய்தார்.
By : King 24X7 News (B)
Update: 2023-12-17 10:01 GMT
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் தி.மு.க. மாநில இளைஞரணி இரண்டாவது மாநாடு வருகின்ற 24-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான பணிகள் நகர்புற உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்று வருகிறது.
தினமும் காலை மாலை இரு வேலையும் அமைச்சர் மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணியினை பார்வையிட்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார். இந்த நிலையில் திடீரென அமைச்சர் புல்லட் வண்டியை தானே ஓட்டி சென்று பணிகளை சுற்றி பார்வையிட்டார்.
அவருடன் மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ, சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் சிவலிங்கம், மேற்கு மாவட்ட செயலாளர் டி.எம்.செல்வகணபதி, மாவட்டச் துணைச் செயலாளர் பாரப்பட்டி சுரேஷ் குமார் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்றனர்.