பிரித்தாண்டு அரசியல் செய்வதை வாடிக்கையாகவே கொண்டவர்கள் திமுகவினர் - தமிழிசை செளந்தரராஜன் !

Update: 2024-05-24 10:49 GMT

தமிழிசை செளந்தரராஜன்

சென்னை சோழிங்கநல்லூரில் பாஜக கட்சி பிரமுகர் மகளின் மஞ்சள் நீராட்டு விழாவில் கலந்து கொண்ட முன்னாள் தெலுங்கானா ஆளுநரும், தென்சென்னை தொகுதி பாஜக வேட்பாளராக போட்டியிட்டவருமான தமிழிசை செளந்தரராஜன் சிறுமிக்கு புடவை வழங்கி வாழ்த்தி சிறப்பித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழிசை செளந்தரராஜன், பிரதமர் ஒடிசாவில் பேசியது குறித்து கேட்டதற்கு, தமிழகத்தில் சாவி இருப்பதாக தான் சொன்னார், திருடர்கள் என்ற வார்த்தையை சொன்னது யாரு, யாரு என நான் கேட்கிறேன், தமிழர்களை மிகவும் மோசமாக விமர்சிப்பவர்கள் ஸ்டாலினும், செல்வ பெருந்தகையும் தான், சாவி அங்கு இருக்கு அப்படி எதுக்கு சொன்னார் என்றால் அதிகாரம் இல்லாத ஒருவர் பின் வாசல் வழியாக தேர்ந்தெடுக்கப்படாத ஒரு நபர் அங்கே கோலோச்சிக் கொண்டிருக்கிறார் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை, டிஜிபி போய் யார் கிட்ட ரிப்போர்ட் பண்ணனும் என்றால் அவர் கிட்ட தான் பண்ணனும், அமைச்சர்கள் அவரை தான் போய் பார்க்கணும், இப்படிப்பட்ட சூழ்நிலை இருக்கும் போது அதை தான் மறைமுகமாக சொன்னதை வைத்து, திருடர்கள் என்ற வார்த்தையை இவர்கள் சேர்த்துக் கொண்டார்கள், அப்போ தமிழக மக்கள் யார் இவர்களை போல என்று சொல்லுகிறார்கள் என புரிந்து கொள்ள வேண்டும்,

பிரித்தாண்டு அரசியல் செய்வது வாடிக்கையாகவே கொண்டவர்கள் திராவிட முன்னேற்ற கழகம், இன்றைக்கு செல்வப்பெருந்தகை சொல்றாரு பிரதமர் மோடியும், அமித்ஷா அவர்களும் மன்னிப்பு கேட்க வேண்டுமாம் இல்லையென்றால் கமலாலயம் முற்றுகையிடப்படுமாம்,

இலங்கையில் அவ்வளவு தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு நீங்கள் முதலில் பகிரங்க மன்னிப்பு கேடகணும், மத்தியில் காங்கிரசும் இங்கு திமுக தான் ஆட்சியில் இருந்தாங்க நிறுத்தலையே அவர்கள், எவ்வளவு பேர் கொல்லப்பட்டார்கள், ஆக பின் வாசல் வழியாக ஒருவர் அதிகாரம் செலுத்திக் கொண்டிருக்கிறார், யாரோ ஒரு தனி நபரை சொன்னதை ஒட்டுமொத்தமாக தமிழர்கள் மேல் சொன்னதாக புகுத்தி அதை திருடர்கள் என்ற வார்த்தையை உருவகப்படுத்தி செய்வது மிகத்தவறு, தமிழர்களை திருடர்கள் என யார் சொல்கிறார்கள் தமிழர்கள் மீது மிகுந்த அக்கரை கொண்ட பாரதபிரதமர் அவர்கள் தமிழ்மொழி எனக்கு மிகுந்த மனதிற்கு மிகவும் நெருக்கமான மொழி, காசி தமிழ்ச்சங்கம், காசி செள்ராஷ்டிரா சங்கம் அதற்காக தான் நடத்தினேன். தேர்தல் அறிக்கையில் கூட தமிழ் வளர்ச்சிக்கு நாங்கள் பாடுபடுவோம் என்று சொல்றாங்க, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூட அது இல்லை, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் எனது பங்கு மிகப்பெரிய பங்கு என்று சொல்லும் ஸ்டாலின் கூட அதில் தமிழ் வளர்ச்சிக்காக எதுவும் சொல்லவில்லை ஆனால் பாஜக சொல்லி இருக்கிறது.

சொல்லாத ஒன்றை உருவகப்படுத்தி, அதன் மூலம் குளிர்காய்கிறார்கள். சாம் பிட்ரோடா தென்னிந்தியர்கள் எல்லோரும் கருப்பாக தான் இருப்பார்கள் என சொன்னாரு, தென்னிந்தியர்கள் அதில் தமிழகத்தை சார்ந்தவர்களும் அடங்கும் ஆனால் அன்றைக்கு இளங்கோவன் என்ன சொன்னாரு, ஒரு நிலப்பரப்பை தான் சொனாரு, மக்களை சொல்லவில்லை என்று சொன்னாரு, ஆக உங்களுக்கு தேவை இருக்கும் போதெல்லாம், தமிழர்கள் இன்சல்ட் ஆன கூட நீங்க தான் உரிமையை விட்டு கொடுத்து கொண்டிருக்கிறீர்கள், அது மேகதாதுவாக இருக்கட்டும், சிலந்தி அணையாக இருக்கட்டும், எல்லா உரிமையும் விட்டுக் கொடுத்து விட்டு, தமிழர்கள் நலன் காக்காமல், ஆனால் பாரத பிரதமர் சொன்னதை திரித்து ஸ்டாலின் சொல்லிக் கொண்டிருக்கிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது, செல்வபெருந்தகையை நான் கண்டிக்கிறேன், அவர்கள் சொல்லாத ஒரு வார்த்தையை திரித்து போட்டு இவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

நான் ஸ்டாலின் கிட்ட கேட்கிறேன், ஒரு அதிகாரி, அதிகாரத்தை செய்திட்டு, ஸ்டாலின் கிட்ட ரிப்போட் பண்ண வேண்டாம், அவர் கிட்ட பண்ணா போதும் என்றால் தமிழக மக்கள் ஒத்துக் கொள்வார்களா இதை தான் பிரதமரும், அமித்ஷா அவர்களும் சுட்டுக் காட்டினார்கள் என தெரிவித்தார்.

Tags:    

Similar News