3 ஆண்டுகளில் 3.5 லட்சம் கோடி கடன் வாங்கியதே திமுகவின் சாதனை -இபிஎஸ்
3 ஆண்டுகளில் 3.5 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி, மக்களை கடனாளியாகி ஆக்கியதுதான் திமுக அரசின் சாதனை என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் 3 ஆண்டுகளில் 3.5 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி, மக்களை கடனாளியாகி ஆக்கியதுதான் திமுக அரசின் சாதனை. மின் கட்டணம், வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் கட்டணம், குப்பை, பால் வரி உயர்வு கட்டுமான பொருட்கள், அத்தியாவசிய பொருட்கள் விலை ஏற்றம். கஞ்சா போதை பொருள்களை இளைஞர்கள், மாணவர்கள் உபயோகிப்பதால் எழும் சட்ட ஒழுங்கு பிரச்சினை .
திமுக அரசின் மூன்றாண்டு கால ஆட்சி சாதனை அல்ல வேதனை என்று குறிப்பிட்டு உள்ளார். இன்னும் இரண்டு ஆண்டுகள் திமுக ஆட்சி தொடர்ந்தால் தமிழகம் படு பாதாளத்திற்கு சென்று விடுமோ என்று மக்கள் அஞ்சுகிறார்கள். தற்போது தமிழகத்தில் நடப்பது சொல்லாட்சியும் அல்ல செயலாட்சியும் அல்ல மாறாக திமுக ஆட்சி செயலற்ற, பயனற்ற, மக்கள் விரோத ஆட்சி என்பதை மக்கள் விரைவில் நிரூபிப்பார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.