உடல் உறுப்புகளை தானம் செய்த இளைஞர்!
உடல் உறுப்பு தானம் செய்த இளைஞரின் உடலுக்கு மருத்துவர்கள் செவிலியர்கள் அரசு மரியாதை செலுத்தினர்.
By : King 24x7 Angel
Update: 2024-03-23 05:18 GMT
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கஸ்பா பகுதியை சேர்ந்த நரேந்திரன் (29) என்ற இளைஞர் கடந்த 20-ம் தேதி இருச்சகர வாகன விபத்தில் பேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நரேந்திரன் மூளைச்சாவு அடைந்தது தெரியவந்தது. இதனையடுத்து நரேந்திரன் பெற்றோர் மற்றும் உறவினர்கள், நரேந்திரனின் உடல் உறுப்புக்களை தானம் செய்ய முன்வந்த நிலையில், சிறுநீரகம் சென்னை காவேரி மருத்துவமனைக்கும், கல்லீரல் குரோம்பேட்டை ரேலா மருத்துவமனைக்கும், கண் பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனைக்கும் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது. இதனையடுத்து உடல் உறுப்பு தானம் செய்த நரேந்திரனின் உடலுக்கு அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் சார்பில் மலர் மாலை அணிவித்து மருத்துவர்கள், செவிலியர்கள், மாணவர்கள், தூய்மை பணியாளர்கள் அனைவரும் ஒன்றினைந்து அரசு மரியாதை செலுத்தினர்.பின்னர் நரேந்திரன் உடல் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.