உயிருக்கு போராாடிய நாய் உயிருடன் மீட்பு

திருச்செந்தூர் அருகே கழுத்தில் சங்கிலி நெறித்த நிலையில் உயிருக்கு போராாடிய நாயை தூத்துக்குடி கல்லூரி பேராசிரியர் அளித்த தகவலின் பேரில் தீயணைப்பு படை வீரர்கள் மீட்டனர்.

Update: 2024-05-31 14:28 GMT

நாய் மீட்பு 

தூத்துக்குடி காமராஜ் கல்லூரி வணிகவியல் துறைத் தலைவர் பேராசிரியர் கோபாலகிருஷ்ணன் திருச்செந்தூர் அருகே செட்டியாபத்து கிராமத்தில் ஐந்து வீட்டு சுவாமி திருக்கோயிலுக்கு சாமி கும்பிடுவதற்கு சென்றுள்ளார். அப்போது ஆண் நாய் ஒன்று கோவில் வாசலில் கழுத்தில் நெறிக்கப்பட்டு இருந்த சங்கிலியுடன் மிகவும் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.

அதன் கழுத்தில் உள்ள சங்கிலி அதன் கழுத்தை மிகவும் ஆழமாக அறுத்து இருந்தது. உயிருக்கு போராடிய நாயை மீட்க பேராசிரியர் மற்றும் குடும்பத்தினரும் முயற்சித்துள்ளனர். பின்னர் அவசர உதவி எண் மூலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் இரவு நேரத்திலும் விரைந்து வந்து வந்தனர், நாயின் கழுத்தில் பல நாட்களாக இறுக்கிக்கொண்டிருந்த சங்கிலியை அகற்றினர். பின்னர் மருந்து பூசி முதலுதவி அளிக்கப்பட்டது.

உயிருக்கு போராடிய நாயை உரிய நேரத்தில் காப்பாற்றிய பேராசிரியர் குடும்பத்தினர் மற்றும் தீயணைப்பு மீட்பு படை வீரர்கள் சதிஷ் குமார், பிரவின் சாமுவேல், ஸ்ரீனிவாசன், தவசி ராஜ் செட்டியாபத்து பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

Tags:    

Similar News