பிரச்சாரத்தின் போது மைக் அடிக்கடி பழுதானதால் பரபரப்பு

தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பிரச்சாரத்தின் போது மைக் அடிக்கடி பழுதானதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-04-03 11:26 GMT

தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பிரச்சாரத்தின் போது மைக் அடிக்கடி பழுதானதால் பரபரப்பு ஏற்பட்டது.


தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராக ரவீனா ரூத் ஜென் போட்டியிடுகிறார். அவர் இன்று தூத்துக்குடி 3வது மைல் பகுதியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கு கட்சி தொண்டர்களுடன் உறுதிமொழி எடுத்துக் கொண்டார் பின்னர் திறந்த வேனில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நவீன ரூத் ஜென் க்கு மைக் சின்னத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் வேல்ராஜ் ஆதரித்து பேசினார். அப்போது அவர் தூத்துக்குடி எம்பி கனிமொழி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மதுவை ஒழித்து விடுவோம் விதவைகள் நிறைந்த மாநிலமாக தமிழகம் உள்ளது என ஆவேசமாக பேசினார் அப்போது மைக் பழுதானது அதை சரி செய்த பிறகு திரும்ப பேச ஆரம்பிக்கும் போதும் மைக் பழுதானது.

இது தொடர்ந்து எதிரே நின்றவர்கள் மைக் சின்னத்தில் போட்டியிடும் உங்களுக்கு மைக் ரிப்பேர் ஆகி இருக்கிறது என்று கேட்டதற்கு உடனே ஒருங்கிணைப்பாளர் வேல்ராஜ் மைக் நல்லாருக்கு ஜெனரேட்டர் தான் ஃபால்ட் என அவர் கூறினார் தொடர்ந்து அவர் பேசும்போது கனிமொழி தேர்தலின் போது மதுவை ஒழித்து விடுவோம் என தெரிவித்தார் ஆனால் தற்போது மதுவை ஒழிக்க எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தமிழகத்தில் கொலை கொள்ளை பாலியல் உள்ளிட்ட நாட்டின் சீரழிவுக்கு மது தான் காரணமாக உள்ளது என அவர் குற்றம் சாட்டினார். தொடர்ந்து நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பேசும்போது மக்கள் நலன் கருதி எல்லாருக்கும் எல்லா உயிரினங்களுக்காகவும் போராடுவேன் நான் மைக் சின்னத்தில் நிற்கிறேன் எனக்கு மைக்கி சின்னத்தில் வாக்களியுங்கள் இன்னும் 500 1000 வாங்கிக் கொண்டு வாக்கை விற்பனை செய்தால் அது உங்கள் உரிமையை விற்பனை செய்வது போல்தான் என தெரிவித்தார்.‌ தூத்துக்குடி மூன்றாவது மைல் பகுதியில் தொடங்கிய பிரச்சாரத்தை தூத்துக்குடி மாநகரப் பகுதியில் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News