திரவுபதியம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி!

கணியனூர் கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் சமேத தர்மராஜா கோவிலில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-04-22 12:49 GMT

கணியனூர் கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் சமேத தர்மராஜா கோவிலில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது.


ராணிப்பேட்டை மாவட்டம் கணியனூர் கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் சமேத தர்மராஜா கோவிலில் மகாபாரத திருவிழா கடந்த மாதம் 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் மாலை 2 மணி முதல் 5 மணி வரை மகாபாரத சொற்பொழிவும், இரவில் பொன்னியம்மன் கட்டை கூத்து குழுவினாரால் நாடகம் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் முக்கிய நிகழ்ச்சியான துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்காக கோவில் அருகில் உள்ள மைதானத்தில் 100 அடி நீளம் கொண்ட துரியோதனன் உருவம் வடிவமைக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து அர்ஜுனன், பீமன் வேடமிட்ட நாடக கலைஞர்கள் தண்டாயுதங்கள் ஏந்தி சண்டைக் காட்சி நடைபெற்றது. மேலும் மூன்று முறை மண் சிற்பத்தை வலம் வந்தபின் பீமன், துரியோதனின் தொடை பகுதியில் கட்டையால் அடித்து துரியோதனனை படுகளம் செய்தார்.

தொடர்ந்து துரியோதனன் தாயார் காந்தாரி இறந்த மகனை பார்த்து ஒப்பாரி வைத்து அழும் காட்சி நடைபெற்றது.நிகழ்ச்சியில் விழாக் குழுவினர், ஊர் நாட்டண்மை தாரர்கள், பொதுமக்கள் உள்பட கணியனூரை சுற்றியுள்ள டி.புதூர், வளையாத்தூர், கீழ்ப்படி, பழையனூர், குண்டலேரி, அத்தித்தாங்கள் போன்ற கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் தீ மிதி விழாவும், இரவு சாமி ஊர்வலம், நாடகம் நடைபெற்றது.

Tags:    

Similar News