சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் - மறுபரிசீலனை நடவடிக்கைக்கு ஜவாஹிருல்லா கோரிக்கை

உதகை மற்றும் கொடைக்கானல் செல்லும் பயணிகளுக்கு இ-பாஸ் வழங்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு தமிழக அரசு உடனடியாக மறுபரிசீலனை மனுத் தாக்கல் செய்து இந்த புதிய கட்டுப்பாட்டினை ரத்து செய்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.;

Update: 2024-04-30 07:35 GMT

ஜவாஹிருல்லா 

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், வருடத்தில் ஓரிரு மாதங்கள் மட்டுமே,  சுற்றுலாப் பயணிகள் குவியும்  இடங்களான உதகை மற்றும் கொடைக்கானல் , அம்மலைவாழ் மக்களின் பெரும் பொருளாதார நம்பிக்கையாக உள்ளது. ஆனால், உயர்நீதிமன்றம் அங்குச் செல்லும் வாகனங்கள் இ - பாஸ் பெற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள திட்டம் இப்பொழுது செயல்படுத்தப்பட்டால், உதகை மற்றும் கொடைக்கானலில்  சுற்றுலாவை நம்பி வாழக்கூடிய மக்கள்  மிகப்பெரும்  நெருக்கடிக்கு உள்ளவர்கள். இதனால் உள்ளூர் மக்கள் பொருளாதார இழப்புகளைச் சந்திப்பார்கள்.  அது அவர்களுக்குப் பேரிழப்பாக அமையும்.  மேலும் இ-பாஸ் திட்டத்தின் மூலமாக உள்ளூர் வாகனங்களுக்கு நெருக்கடிகள் உருவாகும். 

Advertisement

இதனால் உள்ளூர் வாகன ஓட்டிகள் மிகவும் மன உளைச்சலுக்கு ஏற்படும் சூழல் உள்ளது. ஆகவே இது குறித்து தமிழக அரசு உடனடியாக மறுபரிசீலனை மனுத் தாக்கல் செய்து இந்த புதிய கட்டுப்பாட்டினை ரத்து செய்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இரு மலைத் தலங்களுக்கும் செல்லும் வாகன போக்குவரத்தை ஒழுங்குபடுத்தக் கூடுதல் காவலர்களை காவல்துறை பணியில் அமர்த்தி இப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News