நீலகிரிக்குள் வாகனங்கள் நுழைய இ - பாஸ் கட்டாயம்!
நீலகிரி மாவட்டத்திற்குள் நுழைய வாகனங்களுக்கு இ - பாஸ் முறையை அமல்படுத்த உயர்நீதிமன்றம் கடந்த 29ம் தேதி உத்தரவிட்டது.
Update: 2024-05-03 12:38 GMT
இந்நிலையில் ஊட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பட்டுள்ளதாவது: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி வரும் மே 7ம் தேதி முதல் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் அனைத்து வாகனங்களும் இ - பாஸ் பெற்றே வரவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்கள் நீலகிரி மாவட்ட பதிவு எண் டி.என் 43 பதிவு எண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை.:வெளிமாவட்டங்களில் இருந்து வாகனங்களை வாங்கி நீலகிரி மாவட்டத்தில் வாகன உரிமை மாற்றம் செய்திருக்கும் பொதுமக்கள் வாகனத்தின் அசல் பதிவுச்சான்று, காப்புச்சான்று மற்றும் நடப்பிலுள்ள புகைச்சான்று ஆகியவற்றுடன், ஊட்டி வட்டாரப்போக்குவரத்து அலுவலகத்தை அணுகினால், ஆவணங்களை சரிபார்த்து ஊட்டி வட்டடாரப்போக்குவரத்து அலுவலகத்தால் இ - பாஸ் வழங்கப்படும் . இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது