பண்ணாரி அம்மன் கோவிலில் பந்தல் போடும் பணி துவக்கம்

குண்டம் திருவிழாவை முன்னிட்டு பண்ணாரி அம்மன் கோவிலில் பந்தல் போடும் பணி தொடங்கியது

Update: 2024-03-07 05:40 GMT

குண்டம் திருவிழாவை முன்னிட்டு பண்ணாரி அம்மன் கோவிலில் பந்தல் போடும் பணி தொடங்கியது ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்து மைசூர் நெடுஞ்சாலை அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது உலக புகழ் பெற்ற அருள்மிகு பண்ணாரி அம்மன் திருக்கோவில் லட்சக்கணக்கான பொதுமக்கள் குண்டம் இறங்கி அம்மனை வழிபடுவார்கள். இக்கோவிலில் குண்டம் திருவிழா வருகிற 25-ந் தேதி (திங்கள் கிழமை) இரவு மற்றும் 26-ந் தேதி (செவ்வாய்க்கி ழமை) அதிகாலை நடைபெற உள்ளது.

இதற்காக கோவில் வளாகத்தை சுற்றிலும், குண்டம் முன்பும் பந்தல் போடும்பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. பந்தல்போடும் பணியை துணை ஆணையர் மேனகா மற்றும் பரம்பரை அறங்காவலர்கள் புருஷோத்தமன், ராஜாமணி, தங்க வேல், அமுதா, பூங்கொடி, கோவில் அதிகாரிகள் பார்வையிட்டு ஆலோசனை வழங்கினர்கள்.

Tags:    

Similar News