ஈஸ்டர் : பனிமய மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில் இயேசுநாதர் மூன்றாம் நாள் உயிர்த்தெழும் நிகழ்ச்சி தத்ரூபமாக செய்து காட்டப்பட்டது. இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்று சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டனர்.

Update: 2024-03-31 01:17 GMT

கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் ஈஸ்டர் பண்டிகைக்கு முன்பாக 40 நாள் தவக்காலம் அனுசரித்து வருகின்றனர். கடந்த வியாழக்கிழமை இரவு இயேசு தனது 12 சீடர்களின் பாதத்தை கழுவி அவர்களுடன் உணவருந்துவார் அடுத்த நாள் புனித வெள்ளி என அனுசரிக்க கூடிய நாளன்று இயேசுநாதர் சிலுவை சுமந்து வந்து அவர் சிலுவையில் அறையப்பட்டு உயிரிழந்த பிறகு கல்வாரி மலையிலே அடக்கம் செய்யப்படுவார். மூன்றாவது நாள் உயிர்த்தெழும் நிகழ்ச்சியை ஈஸ்டர் பண்டிகை யாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள உலக புகழ்பெற்ற பனிமய மாதா பேராலயம் மற்றும் திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் இயேசுபிரான் உயிர்த்தெழும் நிகழ்வு தத்துரூபமாக செய்து காண்பிக்கப்பட்டது. ஈஸ்டர் பண்டிகை திருப்பலி பணிமயமாதா கோவில் பங்குத்தந்தை குமார் ராஜா தலைமையிலும் இருதய ஆண்டவர் கோவிலில் ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையிலும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது இதில் ஏராளமான கிறிஸ்தவ மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தியபடி உலக அமைதி வேண்டி சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News