மோகனூர் மணல்குவாரியில் மீண்டும் அமலாக்க துறையினர் சோதனை
நாமக்கல் மாவட்டம் மோகனூரில் உள்ள அரசு அரசு மணல் குவாரியில் இரண்டாம் முறையாக அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனை சுமார் அரை மணி நேரத்தில் முடிவடைந்தது.
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அடுத்த ஒருவந்தூர் அருகே காவேரி ஆற்றில் அரசு மணல் குவாரி செயல்பட்டு வந்தது. கடந்த செப்டம்பர் மாதம் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதிலிருந்து இந்த குவாரி செயல்படவில்லை. இந்நிலையில்
இன்று மாலை 4.30 மணியளவில் 2 கார்களிள் வந்த அமலாக்கத்துறையினர் பொதுப்பணி துறை அதிகாரிகளுடன் இணைந்து குவாரியை பார்வையிட்டதோடு சோதனையும் மேற்கொண்டனர். சுமார் அரை மணி நேரம் இந்த சோதனை நடத்தப்பட்டது. பின்னர் அதிகாரிகள் அனைவரும் குவாரியில் இருந்து கிளம்பி சென்றனர். கடந்த 10 ஆம் தேதியன்று அமலாக்கத்துறையினர், பொதுப்பணி துறையினருடன் இணைந்து ஆற்றிற்குள் இறங்கி அரசு அனுமதித்த அளவை விட முறைக்கேடாக மணல் அள்ளப்பட்டுள்ளதா என டிரோன் டிஜிட்டல் முறையில் கணக்கீடு செய்தது குறிப்பிடத்தக்கது.