எடப்பாடி பழனிச்சாமி பிரச்சார பயணம் மாற்றம்
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சார பயணத்தின் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.;
Update: 2024-03-28 00:55 GMT
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சார பயணத்தின் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத் திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 5 ஆம் தேதி திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி கவுந்தப்பாடி பகுதியில் மாலை 4 மணிக்கு, ஈரோடு நாடாளுமன்ற தொகுதி பூந்துறை ரோடு கஸ்பா பேட்டை ஈரோடு மாநகர் பகுதியில் நடைபெற உள்ளது. ஏப்ரல் 13-ஆம் தேதி விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி விழுப்புரம் நகரம் பகுதியில் மாலை 4:30 மணிக்கு, தியாகதுருகம் ரோடு யமஹா ஷோரூம் எதிரில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதியிலும், மாலை 5:30 மணிக்கு, இரவு 7 மணிக்கு எம்ஜிஆர் திடல் ராணிப்பேட்டை ஆத்தூர் பகுதியில் பிரச்சாரம் நடைபெற உள்ளது.