பாஜகவோடு கூட்டணி இல்லையென எடப்பாடி பழனிசாமி வேஷம் - ஈஸ்வரன்
தேர்தலுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி பாஜகவை ஆதரிப்பார். அதிமுக தொண்டர்களுக்கு துரோகம் செய்யும் எடப்பாடி பழனிசாமிக்கு பாடம் கற்பிக்க அதிமுக தொண்டர்கள் திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என ஈஸ்வரன் தெரிவித்தார்.;
Update: 2024-04-03 19:17 GMT
ஈஸ்வரன்
ஈரோடு் நாடாளுமன்ற திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து மரப்பாலம் பகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொது செயலாளர் ஈஸ்வரன் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுசெயலாளர் ஈஸ்வரன் .எந்தவொரு சர்வதிகார ஆட்சிக்கும் எல்லை உண்டு, இலவச பேருந்து பயணத்தில் பெண்கள் போராடி ஆண்களுக்கு இலவச பயணத்தை பெற்று தர வேண்டும்.அனைவரும் பாஜகவை விரட்ட நினைக்கும் போது பாஜகவை மீண்டும் ஆட்சியில் ஏற்ற அதிமுக நினைப்பதாகவும், அதிமுக இப்போது கூட்டணி இல்லை என கூறி வேஷம் போடுவதாகவும் , தேர்தலுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி பாஜகவை ஆதரிப்பார். அதிமுக தொண்டர்களுக்கு துரோகம் செய்யும் எடப்பாடி பழனிசாமிக்கு பாடம் கற்பிக்க அதிமுக தொண்டர்கள் திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என ஈஸ்வரன் கேட்டுக்கொண்டார்.