ஏப்ரல் 1ம் தேதி வேலூருக்கு வருகை தரும் எடப்பாடி பழனிச்சாமி
அதிமுக வேட்பாளர் பசுபதியை ஆதரித்து வேலூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-21 16:35 GMT
எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம்
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக வாணியம்பாடியை சேர்ந்த மருத்துவர் பசுபதி அறிவிக்கப்பட்டுள்ளார்.
அவரை ஆதரித்து வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர், தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி பள்ளிகொண்டா கந்தனேரி பகுதியில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமை அலுவலகம் சற்று முன்னர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.