வேலூர்: முதியவர் மயங்கி விழுந்து பலி
அணைக்கட்டு அருகே கால்வாய் ஓரம் மயங்கி விழுந்த முதியவர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
Update: 2024-04-14 11:32 GMT
பலி
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா வல்லண்டராமம் கிராமம் பொற்கொடி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகேசன் (72). இவர், சம்பவத்தன்று அங்குள்ள ஏரி நீர்வரத்து கால்வாய் ஓரம் நடந்து சென்றார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் அணைக்கட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.