வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்

ஜெயங்கொண்டம் அருகே கூத்தங்குடியில் குடிநீர், வீட்டு மனை பட்டா, சாலை வசதி செய்து தராத மத்திய மாநில அரசை கண்டித்து வீடுகள், வீதிகளில் கருப்புக்கொடி கட்டி நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-03-29 07:12 GMT

போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தா.பழூர் முதல்நிலை ஊராட்சிக்குட்பட்ட கூத்தங்குடி கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசதி வருகின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக குடிநீர் வசதி,  சாலை வசதி, வீட்டு மனை பட்டா உள்ளிட்ட  அடிப்படை வசதிகளை கேட்டு பலமுறை மனுக்கள் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை

. குடிநீர் தேவைக்காக நீண்ட தூரம் சென்று பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருவதால் இதில் அதிருப்தி அடைந்த அப்பகுதி மக்கள் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க போவதாகவும், பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யாத மத்திய மாநில அரசை கண்டித்தும் தங்களது வீடு மற்றும் தெரு வீதிகளில் கருப்பு கொடி கட்டி  கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பொது மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால் அடுத்த கட்டமாக ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை போன்ற அடையாள அட்டைகளை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்க போவதாகவும் எச்சரிக்கை விடுத்தனர்.பொதுமக்களின் நாடாளுமன்றத் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தால் தா பழூர் பகுதி முழுவதும் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

Similar News