''மக்களை பிளவுபடுத்தும் தேர்தல் பிரச்சாரம்'' - மோடி மீது பாயும் புகார் !
பிரதமர் மோடி மக்களை பிளவுபடுத்தும் நோக்கத்தோடு தேர்தல் பிரச்சாரம் செய்து வருவதாகவும் அவர் தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியிடம் காங்கிரஸ் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகுவை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச் செயலாளர் டி செல்வம் சந்தித்து பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடக் கூடாது என புகார் மனு அளித்தார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச் செயலாளர் டி செல்வம் அப்பொழுது அவர் பேசுகையில் இதுவரையில் இந்தியா பல பிரதமர்களை சந்தித்துள்ளது ஆனால் பிரதமர் மோடி எவரும் செய்ய முடியாத அற்பமான காரியங்களில் தேர்தல் பிரச்சாரத்தின் போது செய்து வருவதாகவும்
நாடு ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று பல தலைவர்கள் பாடுபட்டனர் அவர்கள் மத்தியில் மக்களை பிளவுபடுத்த நோக்கத்தோடு ஜாதி மதம் மொழியை வைத்து அரசியல் செய்து வருவதாக அவர் கூறினார்
மேலும் அவர் பேசுகையில் வாக்கு வங்கி அரசியலுக்காக தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்களை பிளவுபடுத்தும் வகையில் பிரதமர் பேசி வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
குறிப்பாக பிரதமர் மோடி ஒரிசா மாநிலத்தின் பூரி நகரில் தேர்தல் பிரச்சாரத்தின் போது பூரி ஜகந்நாதர் கோவிலின் சாவி ஆறாண்டுகளாக காணவில்லை அதனை மறைத்து வைத்துள்ளார்கள் என்று பேசியிருந்தால் ஒரு பிரதமர் மந்திரிக்கு ஒரு கோவிலின் சாவி ஆறாண்டுகள் காணவில்லை என்று தற்போது தான் தெரிந்ததா என அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழ்நாட்டிற்கு வரும்போது தமிழரின் பாரம்பரியத்தை உயர்த்தி பேசுகிறார் ஆனால் மற்ற மாநிலங்களுக்கு செல்லும் பொழுது தமிழர்களை திருடர் போல் பேசி வருவது கண்டிக்கத்தக்கது இதனை பல அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டித்து உள்ளார்கள்.
மக்களைப் பிளவுபடுத்தும் நோக்கத்தோடு பிரதமர் பேசுவதால் எஞ்சிய தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி இன்று மனு அளித்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக மேற்கு வங்கத்தில் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தேர்தல் பரப்பரையின்போது எதிர்க்கட்சி தாக்கி பேசியதாக அவரை ஒருநாள் தேர்தல் பிரச்சாரம் செய்யக்கூடாது என்று தேர்தல் ஆணையம் தடை விதித்தது அதேபோன்று பிரதமர் மோடிக்கும் ஒரு நாள் தேர்தல் பிரச்சாரம் செய்யக்கூடாது என்று தடை விதிக்க வேண்டும்.
அவ்வாறு தேர்தல் ஆணையம் தடை விதிக்கவில்லை என்றால் இந்தக் கோரிக்கை தொடர்பாக உயர்நீதிமன்றம் அல்லது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.