தேர்தல் வழக்கு தாக்கல் செய்யலாம்

தேனியில் மனுத்தாக்கல் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து தேர்தல் வழக்கு தாக்கல் செய்யலாம் என தலைமை நீதிபதி அமர்வு அறிவுறுத்தியுள்ளது.

Update: 2024-04-11 01:06 GMT

தேனியில் மனுத்தாக்கல் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து தேர்தல் வழக்கு தாக்கல் செய்யலாம் என தலைமை நீதிபதி அமர்வு அறிவுறுத்தியுள்ளது.


தேனி மக்களவை தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து அறிவரசு பாண்டியன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதை தாமதமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி முடித்து வைத்தது சென்னை உயர் நீதிமன்றம் . தேர்தல் வழக்கு தாக்கல் செய்யலாம் என தலைமை நீதிபதி அமர்வு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. மாவட்ட நூலக கண்காணிப்பாளரான தன்னை அரசு ஊழியர் என கூறி வேட்புமனு நிராகரித்தது சட்டவிரோதம் என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நூலகத்துக்கு அரசு நிதி ஒதுக்கினாலும் தான் அரசு ஊழியர் அல்ல என மனுதாரர் தரப்பில் வாதம் செய்யப்பட்டது. ஏப்ரல் 19ல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தபால் வாக்கு பதிவு பணிகள் துவங்கி விட்டதால் வழக்கை ஏற்க கூடாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News