தேர்தல் களம் அதிமுகவுக்கு சாதகம் - கடம்பூர் ராஜூ

பாஜக, திமுக அரசுகள் மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதால்தேர்தல் களம் அதிமுகவுக்கு சாதகமாக உள்ளது என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

Update: 2024-02-12 02:25 GMT

 முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சத்திய பாமா கல்யாண மண்டபத்தில், துாத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் ‘நாடளுமன்றம்., நோக்கி’ என்ற தலைப்பில் இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறை பயிற்சி பட்டறை மற்றும் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. துாத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க., இளைஞர், இளம்பெண் பாசறை செயலாளர் கவியரசன் தலைமை வகித்தார். கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ ,, மாநில இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் முன்னாள் எம்எல்ஏ டாக்டர் பரமசிவம் ஆகியோர் கலந்து கொண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து எடுத்துரைத்தனர்.

இதில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ‌ராஜூ பேசுகையில் நமக்கான சின்னம் இரட்டை இலை. மக்களுக்கு இரட்டை இலை சின்னத்தை தெரியப்படுத்தனும். பத்திரிக்கையில் வரும் கருத்துக் கணிப்பை மீறி அ.தி.மு.க., வெற்றி பெறும். அ.தி.மு.க., யாருக்கும் அடிமை இல்லை. மக்களுக்குத்தான் அடிமைாக இருந்த இயக்கம் அ.தி.மு.க., என்பதை முத்திரை பதிக்க போகிறோம். நான்கரை ஆண்டுகள் நல்லாட்சி தந்த நாயகர் எடப்பாடியார்.

தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின் மக்கள் எடப்பாடியார் ஆட்சி பற்றி பேசுகிறார்கள். 2021 தேர்தல் களத்தில் அ.தி.மு.க.,தான் வெற்றி பெறும் நிலையில் இருந்தது. தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதியால் வெற்றி பெற்றார்கள். அந்த தேர்தல் வாக்குறுதியே அவர்களை இந்த தேர்தலில் திருப்பி தாக்கும் ஏவுகணையாக மாறி இருக்கிறது. 3 ஆண்டுகள் முடிந்தபின்னும், நீட் தேர்வு ஒழிக்கப்படவில்லை. விவசாய காப்பீடு திட்டம், பொங்கல் பரிசு தொகை எல்லாம் எடப்பாடியார் அள்ளிக் கொடுத்தார். மக்களிடம் இதை தெரியப்படுத்தனும்.

விடியா ஆட்சியில், எடப்பாடியார் வந்தால்தான் விடிவு கிடைக்கும். மக்கள் அல்லல்படுகின்றனர். தேசிய கட்சிகளால் தமிழகத்துக்கு நன்மையில்லை என்று முடிவெடுத்த ஜெயலலிதா வழியில் எடப்பாடியார் முடிவு எடுத்து உள்ளார். 10 ஆண்டு பா.ஜ., ஆட்சி மீதும், 3 ஆண்டு தி.மு.க., ஆட்சி மீதும் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். களம் நமக்கு சரியாக உள்ளது. நன்றாக உழைக்கும் பொறுப்பாளர்களுக்கு பிரதிபலன் உண்டு. கொரனோ காலத்தில் இந்திய துணை கண்டத்தில் மாணவர்கள் அனைவரையும் ஆல்பாஸ் போட்டவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான்.    தேர்தலில் சிப்பாய்களாக இளைஞர், இளம்பெண்கள் உருவெடுக்கவேண்டும். அதில் இருந்துதான் மேஜர், கர்னல் என்று உருவாக்கப்படுவார்கள் என்றார். இதில், முன்னாள் எம்.எல்.ஏ., மோகன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News