வாக்குச்சாவடி அலுவலர்களை தெரிவு செய்யும் பணி தொடக்கம்!
வாக்குச்சாவடி அலுவலர்களை சட்டமன்றத் தொகுதிகளின் வாரியாக கணினி குலுக்கல் முறையில் தெரிவு செய்யும் பணி தொடங்கப்பட்டது.
Update: 2024-04-02 00:37 GMT
நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல்-2024னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் வாக்குப்பதிவு மையங்களில் பணிபுரியவுள்ள வாக்குச்சாவடி அலுவலர்களை சட்டமன்றத் தொகுதிகளின் வாரியாக கணினி குலுக்கல் முறையில் தெரிவு செய்யும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர்/கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் ராதாகிருஷ்ணன், தலைமையில், தேர்தல் பொது பார்வையாளர்கள் கார்த்திகே தன்ஜி புத்தப்பாட்டி, சுரேஷ், மற்றும் முத்தாடா ரவிச்சந்திரா, தேர்தல் காவல் பார்வையாளர் உதய் பாஸ்கர் பில்லா, ஆகியோர் முன்னிலையில் இன்று (01.04.2024) ரிப்பன் கட்டட வளாக அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் ரஷ்மி சித்தார்த் ஜகடே, உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.