வாக்குப் பதிவு மையங்களில் தேர்தல் அலுவலர் ஆய்வு

அரியலூர் மாவட்ட கலெக்டர் தேர்தல் அலுவலருமான ஆணி மேரி ஸ்வர்ணா வாக்குப் பதிவு மையங்களில் ஆய்வு செய்தார்.

Update: 2024-03-29 11:43 GMT

 தேர்தல் அலுவலர் ஆய்வு

சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வைக்குப் பதிவு மையங்களில் மாவட்ட தேர்தல் அலுவலரும், அரியலூர் ஆட்சியருமான ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார். மக்களவைத் பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள வாரணவாசி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, சமத்துவபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி வாரணவாசி மற்றும் கீழப்பழூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, கீழப்பழுவூர் அழகப்பா சிமென்ட் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட மையங்களில் ஆய்வு செய்த அவர், மின் விளக்கு வசதிகள் இல்லாத இடங்களில் உடனடியாக மின்விளக்குகள், கழிவறை வசதிகள், குடிநீர் வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் பயன்படுத்தக் கூடிய சாய் தளங்களை உடனடியாக ஏற்படுத்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வில் வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், வட்டாட்சியர் ஆனந்தவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News