தேர்தலை முன்னிட்டு நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி
தேர்தலை முன்னிட்டு நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி பொது பார்வையாளர்கள் மூலமாக ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024 ஐ முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் வாக்குப்பதிவு மையங்களில் பணிபுரிய வாக்குச்சாவடிகளின் வாரியாக கணினி குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்பட்ட 1165 நுண் பார்வையாளர்களுக்கு (Mico Observer's) வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி அன்று பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் அந்தந்த தொகுதி பொது பார்வையாளர்கள் மூலமாக தொகுதி வாரியாக நடைபெறவுள்ளது.
வடசென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்வு செய்யப்பட்ட 385 நுண் பார்வையாளர்களுக்கு (Mico Observer's) காலை 10.00 மணி முதல் 11.30 மணி வரையும், மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்வு செய்யப்பட்ட 397 நுண் பார்வையாளர்களுக்கு (Mico Observer's) பிற்பகல் 12.00 மணி முதல் 130 மணி வரையும் தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்வு செய்யப்பட்ட 389 நுண் பார்வையாளர்களுக்கு (Mico Observer's) மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரையும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.
நுண் பார்வையாளர்களுக்கு (Mico Observer's) ஏப்ரல் 12 ஆம் தேதி அன்று நடத்தப்படும் பயிற்சி வகுப்பில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் எனவும், பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாத அலுவலர்கள் மீதுதேர்தல் நடத்தை விதிகளின்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலரும் கூடுதல் தலைமைச் செயலாளரும் ஆணையாளருமான டாக்டர் ராதாகிருஷ்ணன், தெரிவித்துள்ளார்.