10:30க்கு மேல் பிரசாரம் - தடுத்த காவல்துறையுடன் அண்ணாமலை வாக்குவாதம்

கோவையில் இரவு 10:30 மணிக்கு மேல் பிரசாரத்தில் ஈடுபட்ட பாஜகவினரை போலீசார் தடுத்ததால் பாஜக வேட்பாளர் அண்ணாமலை போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Update: 2024-04-15 04:06 GMT

வாக்குவாதம் 

கோவை மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் வருகிறார். நேற்று சூலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார். இந்நிலையில் இரவு 10:30 மணி அளவில் சிந்தாமணி புதூரில் இருந்து ஒண்டிப்புதூர் வரும் வழியில் அவருடன் சாலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர்.இரவு 10 மணியுடன் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி இல்லை என்ற நிலையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பிரச்சாரம் மேற்கொண்டதால் அதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர்.

இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.ஆனால் மேற்கொண்டு செல்வதற்கு காவல் துறை அனுமதி மறுத்த நிலையில், வேனில் இருந்து இறங்கி வந்த பாஜக வேட்பாளர் அண்ணாமலை காவல்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.சட்டத்தை மீறி இரவு நேரத்தில் பிரச்சாரம் மேற்கொள்ளக்கூடாது என காவல் துறையினர் உறுதியாக தெரிவித்தனர். அவர்களுடன் வாக்குவாதம் மேற்கொண்டு அண்ணாமலை தான் பிரச்சாரம் செய்யவில்லை என்றும் கையெடுத்து கும்பிட்டபடிதான் வந்ததாக தெரிவித்தார்.காவல்துறையினர் அனுமதி மறுக்கவே பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதன் காரணமாக ஒண்டிபுதூர் சாலையில் இரவு நேரத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.இந்தப் போராட்டம் காரணமாக இரவு நேரத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.

Tags:    

Similar News