வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்: எம்.எல்.ஏ., ஆய்வு

வாக்காளர் பட்டியல் திருத்த முகாமை எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.

Update: 2023-11-26 11:16 GMT
எம்எல்ஏ ஆய்வு
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கச்சிராயப்பாளையம் அடுத்த வடக்கநந்தல் பேரூராட்சிக்குட்பட்ட அக்கராயபாளையம், வடக்கநந்தல், கச்சிராயப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஓட்டுச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நேற்று நடந்தது.

முகாமை சங்கராபுரம் தொகுதி எம்.எல்.ஏ.,உதயசூரியன் நேரில் ஆய்வு செய்தார். அப்போது, தி.மு.க., நகர செயலாளர் ஜெயவேல், ஒன்றிய சேர்மன் சந்திரன், முன்னாள் நகர செயலாளர் அர்ஜூனன், 1வது வார்டு செயலாளர் பாண்டியன்,கவுன்சிலர்கள் சின்னதுரை, முத்து,வெங்கடேசன் உட்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News