இன்று முதல் சென்னை பூங்கா நகர் ரயில் நிலையத்தில் மின்சார ரயில்கள் நின்று செல்லும்!!
சென்னை பூங்கா நகர் ரயில் நிலையத்தில் இன்று முதல் மின்சார ரயில்கள் நின்று செல்லும் என தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை பூங்கா நகர் ரயில் நிலையத்தில் இன்று முதல் மின்சார ரயில்கள் நின்று செல்லும். சென்னை கடற்கரை – வேளச்சேரி மின்சார ரயில்கள் பூங்கா நகர் ரயில் நிலையத்தில் இன்று முதல் நின்று செல்லும். MPKT நிலையத்தில் பார்க்டவுன் நிலையம் – MRTS செயல்பாடுகள் இன்று தொடங்கப்பட்டுள்ளன. எனவே சென்னை கடற்கரை – வேளச்சேரி – சென்னை கடற்கரை இடையே MRTS செல்லும் புறநகர் ரயில்கள் இன்று 11 நவம்பர் 2024 முதல் பார்க் டவுன் ஸ்டேஷனில் நிற்கின்றன, எனவே பயணிகள் MRTS வழித்தடத்தில் உள்ள பார்க் டவுன் ஸ்டேஷனில் சென்று வரலாம் என்று தெரிவித்துள்ளனர். 14 மாதங்களுக்குப்பிறகு, சென்னை கடற்கரையிலிருந்து மீண்டும் வேளச்சேரிக்கு பறக்கும் ரயில் சேவை அக்டோபர் 29ம் தேதி முதல் தொடங்கியது. ஆனால், பூங்கா நகா் ரயில் நிலையத்தில் நின்று செல்லாததால் பயணிகள் அதிருப்தியடைந்தனா். சென்னை எழும்பூா் – கடற்கரை இடையே தண்டவாளம் அமைக்கும் பணி காரணமாக வேளச்சேரிக்கு இயக்கப்படும் பறக்கும் ரயில் சேவை கடந்த 14 மாதமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்தப் பணி தற்போது நிறைவடைந்த நிலையில் கடந்த அக்டோபர் 29ம் தேதி முதல் ரயில் சேவை மீண்டும் தொடங்கியது.இந்நிலையில் பூங்கா நகா் ரயில் நிலையத்தில் நிற்காது என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. இதனால், அரக்கோணம், திருவள்ளூா், ஆவடி, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட வடசென்னை பகுதியில் இருந்து தென்சென்னை பகுதிக்கு பயணிப்போா் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனா். பறக்கும் ரயில் இயங்கும் என அறிவிக்கப்பட்டதையடுத்து பூங்கா நகா் ரயில் நிலையம் வந்த பயணிகள் மின்சார ரயில் நிற்காததால் ஏமாற்றமடைந்தனா். இந்நிலையில் இன்று முதல் பூங்கா நகர் ரயில் நிலையத்தில் இன்று முதல் மின்சார ரயில்கள் நின்று செல்லும் என்று அறிவித்துள்ளனர். சென்னை கடற்கரை – வேளச்சேரி மின்சார ரயில்கள் பூங்கா நகர் ரயில் நிலையத்தில் இன்று முதல் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.