மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது !
Update: 2024-05-17 11:44 GMT
நேற்றைய மின் தேவை 17,331 மெகாவாட் அளவுக்கு இருந்தது மின்துறை தகவல் தெரிவித்துள்ளது.
"கடந்த மார்ச் 20ம் தேதி மிக அதிகமாக 19,387 மெகாவாட்டாக மின் தேவை இருந்தது. அன்றைய தினம் மின் நுகர்வும் 42.37 கோடி யூனிட் ஆக இருந்துள்ளது.
தற்போது 2 ஆயிரம் மெகாவாட் மின் தேவையும், ஒரு கோடி யூனிட் மின் நுகர்வும் குறைந்துள்ளது.
வீடு, தொழிற்சாலை உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் தினசரி மின் நுகர்வு 30 கோடி யூனிட்டாக உள்ளது.
கோடை வெயில் காரணமாக மின் நுகர்வானது 40 கோடி யூனிட்டை தாண்டியது. தற்போது 1 கோடி யூனிட் குறைந்துள்ளது.'' என மின்துறை தகவல் தெரிவித்துள்ளது.