மின் கட்டண உயர்வு : அதிமுகவை தொடர்ந்து தேமுதிக அறிவிப்பு !

Update: 2024-07-18 08:00 GMT
மின் கட்டண உயர்வு : அதிமுகவை தொடர்ந்து தேமுதிக அறிவிப்பு !

பிரேமலதா விஜயகாந்த்

  • whatsapp icon
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

மின் கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகளை கண்டித்து வருகிற 25ஆம் தேதி அனைத்து மாவட்டங்களில் தே.மு.தி.க சார்பில் போராட்டம் நடைபெற உள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மேலும் தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் பாமாயில், பருப்பு வகைகள் கடந்த சில மாதங்களாக கிடைக்காததை கண்டித்தும், காவிரி நீரை திறக்க மறுக்கும் கர்நாடகா அரசை கண்டித்தும், மத்திய மாநில அரசுகள் காவிரியில் இருந்து தண்ணீரை உடனடியாக பெற்று தர வேண்டிய ஜூலை 25 ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணி அளவில் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News