புலிகள் காப்பகத்தில் யானைகள் கணக்கெடுப்பு நாளை துவக்கம்

முதுமலை புலிகள் காப்பகத்தில் ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு நாளை துவங்கி 25-ம் தேதி வரை நடைபெறுகிறது.

Update: 2024-05-22 15:50 GMT

பைல் படம்


இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டம் சுமார் 60 சதவீதம் வனப்பகுதிகளை கொண்டுள்ளது. யானை, சிறுத்தை, புலி, கரடி, மான், காட்டுமாடு உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகளின் வாழ்விடமாக இந்த காடு திகழ்கிறது. முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிகளில் யானைகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் முதுமலை புலிகள் காப்பகத்தில் இந்த ஆண்டிற்கான யானைகள் கணக்கெடுப்பு நாளை துவங்கவுள்ளது.

கணக்கெடுப்பு தொடர்பான பயிற்சி முகாம் இன்று நடைபெற்றது. இதில் வன பணியாளர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பின் கள பணிகள் நாளை தொடங்கி 25-ம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது.

Tags:    

Similar News