மின்வேலியில் சிக்கி யானைகள் உயிரிழப்பு - உயர் நீதிமன்றம் எச்சரிக்கை
மின் வேலிகளில் சிக்கி யானைகள் இறப்பது தொடர்ந்தால் மின்வாரியத்துக்கு அதிக அபராதம் விதிக்க நேரிடும் என்று சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Update: 2024-06-09 07:48 GMT
மின்வேலியில் சிக்கி யானைகள் இறப்பதைத் தடுக்கும் வகையில், தேவையான பாதுகாப்பு உபகரணங்களை கொள்முதல் செய்யும் டெண்டர் இறுதி செய்யப்படவில்லை. இவ்வளவு நாள் காலதாமதம் ஏன்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். யானைகள் மின்வேலியில் சிக்கி இறப்பதைத் தடுக்கும் பாதுகாப்பு கருவிகள் கொள்முதல் டெண்டர் இறுதி செய்யப்பட்டு விட்டது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. யானைகள் இறப்பு விஷயத்தில் அரசு உரிய தீவிரம் காட்டவில்லை என்றால் நீதிமன்றம் கடும் உத்தரவுகளை பிறப்பிக்க நேரிடும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.