பள்ளிக்கல்வித்துறை அறிவித்த கூடுதல் வேலை நாட்களை குறைக்க வலியுறுத்தல்

ஆசிரியர்கள் மாணவர்கள் நலன் கருதி இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ள ஆண்டு நாட்காட்டியினை மறுபரிசீலனை செய்து கூடுதல் வேலையாட்களை குறைத்து கடந்த ஆண்டுகளைப் போல 210 நாட்களை வேலை நாட்களாக வைக்க தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்.

Update: 2024-06-15 17:39 GMT

பள்ளிக்கல்வித்துறை அறிவித்த கூடுதல் வேலை நாட்களை குறைக்க வலியுறுத்தல்

2024 - 2025 ஆம் கல்வியாண்டிற்கான பள்ளிக்கல்வித்துறையின் பள்ளி நாட்காட்டியில் 220 வேலைநாட்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆசிரியர்களுக்கான பயிற்சி நாட்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. அட்டவணையில் ஆசிரியர்கள் மாணவர்கள் நலன் கருதி மாற்றங்களை செய்திட தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்த கல்வி ஆண்டு ஜூன் மூன்றாம் தேதிக்கு பதில் 10ஆம் தேதி துவங்கியுள்ளது கல்வியாண்டின் துவக்கம் 5 நாட்கள் மட்டுமே காலதாமதாக இருந்தும் கூடுதலாக 19 சனிக்கிழமைகள் வேலைநாட்கள் என்பது மாணவர்களுக்கும் கொடுக்கக்கூடியாதாகும். உண்மையில் ஆசிரியர்களுக்கும் அட்டவணையை கூடுதல் மனஅழுத்தத்தை கூர்ந்து ஆய்வு செய்கிறபோது மாணவர்களுக்கான வேலை நாட்கள் 220 எனவும் ஆசிரியர்களுக்கான வேலை நாள் 225 ஆகவும் உள்ளது. ஆசிரியர்களுக்கு ஓராண்டிற்கு வழங்கப்படும் பயிற்சி நாட்கள் வேலை நாட்களாகவே கருதப்படுகிறது பள்ளிக்கல்வித்துறையின் அரசாணை படி தொடக்க மற்றும் பள்ளிக்கல்வி துறை பள்ளிகளுக்கு கல்வி ஆண்டில் 210 நாட்கள் வேலைநாட்களாக இருக்கும்போது, ஜூன், ஜீலை மற்றும் ஜனவரி 2025 தவிர பிற மாதங்களில் 2 சனிக்கிழமை வேலை நாட்களும் பிப்ரவரி 2025 ல் 3 சனிக்கிழமைகள் வேலை நாட்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காலாண்டு விடுமுறை கடந்த ஆண்டுகளில் 7 நாட்கள் என்பது தற்போது 2 நாட்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. 10 , 12 வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் கூடுதல் வகுப்புகளை ஏற்கனவே நடத்தி வருகிறார்கள்.

சனிக்கிழமை விடுமுறை நாட்களில் மட்டுமே ஆசிரியர்கள் தங்களுக்குரிய சொந்த அலுவல்கள் அலுவலகம் சார்ந்த பணிகளை செய்ய வேண்டி உள்ளது. இந்த நிலையில் ஒரு கல்வியாண்டில் 19 சனிக்கிழமைகள் கூடுதல் வேலை நாட்கள் என்பது ஆசிரியர்கள் மீது கூடுதல் பணி சுமையாக உள்ளது மேலும் கல்வியாண்டின் கடைசி வேலை நாள் ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் அதன் பிறகு ஐந்து நாட்கள் ஆசிரியர்கள் நிர்வாகப் பணி என்கிற பெயரில் வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது இதுவரை இது கடைபிடிக்கப்படாத புதிய நடைமுறையாகவும்உள்ளது. இந்த அட்டவணையில் கடந்த ஆண்டுகளைப் போல இல்லாமல் 10, 11,12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணை குறிப்பிடப்படவில்லை.

மேலும் அட்டவணையில் கல்வி சாரா செயல்பாடுகள் கல்விசார் செயல்பாடுகள் என பிரிக்கப்பட்டுள்ளது இந்தப் பாடவேலைகளை எவ்வகையான ஆசிரியர்கள் கையாளுவது என்பது குறிப்பிடப்படவில்லை. ஐந்து ஆசிரியர்கள் மட்டுமே உள்ள பள்ளிகளில் ஏற்கனவே ஆசிரியர்கள் 40 பாட வேலைகளை கையாண்டு வருகிறார்கள்.

எனவே ஆசிரியர்கள் மாணவர்கள் நலன் கருதி இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ள ஆண்டு நாட்காட்டியினை மறுபரிசீலனை செய்து கூடுதல் வேலையாட்களை குறைத்து கடந்த ஆண்டுகளைப் போல 210 நாட்களை வேலை நாட்களாக வைக்கவும் நிர்வாகப் பணி என்கிற பெயரில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதை அனுமதிக்கும் நிலையினை மாற்றிடவும் கேட்டுக்கொள்கிறோம் என வலியுறுத்தப்பட்டது.

Tags:    

Similar News