சுற்றுச்சூழல் தினம்!
சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தோடர் பழங்குடியின மக்கள் பாரம்பரிய நடனமாடி விழிப்புணர்வை ஏற்படுத்தினர் .
உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு பகல் கோடு மந்து சூழல் மேம்பாட்டு குழு மூலம் பல்வேறு நிகழ்சிகள் நடைபெற்றது. இந்த சுற்றுச்சூழல் மேம்பாட்டு குழு வனத்துறையுடன் இணைந்து தோடர் பழங்குடி மக்கள் கடந்த 10 ஆண்டுகளாக வனப்பகுதியில் உள்ள பிளாஸ்டிக் அகற்றுவது, சூழல் மேம்பாடு, புல்வெளி பாதுகாப்பு, சோலை மரங்களை நடவு செய்து பாதுகாத்தல், நர்சரி அமைத்தல் மற்றும் வன பாதுகாப்பு ,சுற்றுலா பயணிகளுக்கு சுற்றுச் சூழல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றனர்.
இதன் மூலம் 2012 -ம் ஆண்டு தமிழ்நாடு அரசின் "கிரீன் சேம்பியன்ஸ்" விருது பெற்றது. உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பாரம்பரியத்தை கடைபிடிக்கும் வகையில் தோடர் பழங்குடியினர் வீடு இயற்கையில் கிடைக்க கூடிய பில் பிரம்பு, மண் கல் ஆகியவற்றை கொண்டு அமைத்த இந்த வீட்டினை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கும் விதமாகவும், கான்கிரீட் கட்டிடங்கள் அதிகரித்துவரும் இன்றைய சூழ்நிலையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்த வகையிலான அமைப்புகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த தோடர் வீடு திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட வன அலுவலர் கௌதம், நீலகிரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் ஜெயக்குமார் நஞ்சநாடு ஊராட்சி தலைவர் சசிகலா பகல்கோடு மந்து சுழல் மேம்பாட்டு குழுவின் தலைவர் நோர்தே குட்டன் மற்றும் பைக்காரா வன சரக அலுவலர் சரவணன் மற்றும் தோடர் பழங்குடி மக்கள், கலந்து கொண்டனர் பின்பு பாரம்பரிய உடைகள் அணிந்து நடனமாடினர் இதில் சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் கலந்து கொண்டு மர நாற்றுகளை நடவு செய்தனர்.