போதைப் பொருள் பழக்கத்தில் மாணவர்கள் சிக்கிக் கொள்ளாமல் இருக்க இபிஎஸ் வலியுறுத்தல்
அதிமுக சார்பில் போதைப் பொருள் புழக்கத்திற்கு எதிராக தமிழக மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி வெளியிட்டு அறிவுறுத்தல்.
Update: 2024-03-03 16:41 GMT
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்த போதை பொருள் பிரச்சனை அனைவரின் வாழ்வியலை ஒட்டுமொத்தமாக பாதிப்பதாக உள்ளது, குறிப்பாக பள்ளி கல்லூரிகளில் படிக்கும் குழந்தைகள் பாதிப்படைகிறார்கள். ஸ்டாலின் குடும்பத்திற்கு நெருக்கமாக உள்ள திமுக நிர்வாகி போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டு உள்ளார். ஒரு பெற்றோராக தந்தையாக தாயாக நம் குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தை கொடுப்பது நம் கடமை. நாம் வாழ்வது தமிழ்நாடா அல்லது போதைப் பொருள் மொத்த விற்பனை கிடங்கா என்று யோசிக்கும் அளவுக்கு நேற்று ஒரு நாள் மட்டுமே 180 கோடி அளவில் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போதைப் பொருள் புழக்கத்தை தடுக்காமல் கைகட்டி வேடிக்கை பார்த்து சர்வதேச போதை பொருள் மாபியாவுக்கு கருவியாக இருக்கும் திமுக ஆட்சி இனியும் தொடர்ந்தால் தமிழ்நாட்டை காக்க முடியாது. நாளை தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் அதிமுக சார்பில் போதைப்பொருள் புழக்கத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற உள்ளன. போதை பொருள் மாபியா கும்பல் முழுவதும் கைது செய்யப்பட்டு, தமிழ்நாட்டில் கடைசி துளி போதைப்பொருள் ஒளியும் வரை எங்கள் போராட்டம் தொடரும். கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களை இது போல் போதைப் பொருள்களில் சிக்கிக் கொள்ளாமல் பாதுகாப்பது கடமை அறியா வயதில் செய்யும் தவறால் வாழ்க்கை பாதிக்கும். பெற்றோர்கள் போதை பொருள்களால் ஏற்படும் பாதிப்புகளை பிள்ளைகளுக்கு விளக்கி சொல்ல வேண்டும். தமிழ்நாடு காவல்துறை மீது இன்னும் கொஞ்சம் நம்பிக்கை உள்ளது போதைப் பொருள் நடமாட்டம் குறித்து புகார் அளிப்பவர்கள் தகவல்களை பாதுகாப்பாக வைத்து போதை பொருள் நடமாட்டத்தை தடுக்க வேண்டும். தமிழக மாணவர்களிடம் கேட்டுக் கொள்வது ஒன்றுதான் say no to drugs என்று பேசி உள்ளார்.