விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் சமத்துவ கிறிஸ்மஸ் பெருவிழா - அமைச்சர் மா.சுப்ரமணியன் பங்கேற்பு

Update: 2023-12-22 06:57 GMT

அமைச்சர் மா.சுப்ரமணியன் 

விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் சமத்துவ கிறிஸ்மஸ் பெருவிழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக அமைச்சர் மா.சுப்ரமணியன் கலந்து கொண்டார். இதில் இந்து,முஸ்லிம், கிருஸ்டின் என முச்சமயத்தை சேர்ந்த மதபோதகர்களும் கலந்து கொண்டனர்.

விழாவில் 1750 நபர்களுக்கு கிறிஸ்துமஸ் தொகுப்பு வழங்கப்பட்டது .

பின்னர் மேடையில் பேசிய மா.சு

முதலமைச்சரின் விரிவான செயல்களால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழை வந்த சுவடே தெரியாமல் மழை பெய்ந்து இரண்டே நாட்களில் முழுமையாக மழை நீரானது அகற்றப்பட்டிருக்கிறது.

Advertisement

5000 ஐ கேட்டால் ஆயிரம் கொடுத்த மகா பிரபு இன்று 6000 வழங்கியதற்கு 12000 வழங்க கூறுகிறார் அப்படி என்றால் எடப்பாடி பழனிச்சாமிக்கும் நிர்வாக திறமைக்கும் உள்ள தொடர்பை நாம் தெரிந்து கொள்ள முடியும்.

எடப்பாடி பழனிச்சாமி தென் தமிழகத்தில் பார்வையிடுவது குறித்து முதலமைச்சரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு முதலமைச்சரின் பதில் என்னவென்றால் எந்த பழனிசாமி தூத்துக்குடி துப்பாக்கி சூட்டின் போது டிவியில் பார்த்து தெரிந்து கொண்டேன் என்று கூறிய எடப்பாடி பழனிச்சாமியா என்று முதல்வர் கூறினார்.

இன்றைய தி.மு.க ஆட்சியில் மக்கள் திருப்பதியாக உள்ளனர்.

பின் செய்தியாளர்களை சந்தித்த மா. சுப்பிரமணியன்

தூத்துக்குடி ,திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் நீர் தேங்கி இருக்கக்கூடிய பகுதிகளில் வசிக்கக்கூடிய மக்கள் காய்ச்சிய நீரை மட்டுமே குடிப்பதற்கு பயன்படுத்த வேண்டும்.

நெல்லையில் பல்வேறு இடங்களில் வெள்ள நீரானது முழுமையாக வடியப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது ,நாளை நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளேன்.

54 ஆரம்ப சுகாதார நிலையங்கள் நீரில் மூழ்க பட்டு இருந்தது அந்த மூழ்கப்பட்ட சுகாதார நிலையங்களில் தேங்கியுள்ள நீரானது மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டுள்ளது.

பொன்முடிக்கு தண்டனை பற்றி பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவில் கைது செய்ய பலர் உள்ளனர் என்று கூறியுள்ளார் என கேட்ட கேள்விக்கு அது நல்லதுதான்,ரொம்ப சந்தோசம் என அமைச்சர் மா சுப்பிரமணியன் பதில்.

அண்ணாமலையை குற்றச்சாட்டுகளை வைக்காமல் முதலில் வெள்ள நிவாரண பணிகளை பார்க்க சொல்லுங்கள் என அமைச்சர் மா.சு தெரிவித்தார்.

Tags:    

Similar News