பெரிய கல்வராயன் மலைப் பகுதியில் 400 லிட்டர் கள்ள சாராய ஊறல் அழிப்பு
பெரிய கல்வராயன் மலைப் பகுதியில் 400 லிட்டர் கள்ள சாராய ஊறல் அழிப்பு;
By : King 24x7 Website
Update: 2023-12-14 14:59 GMT
பெரிய கல்வராயன் மலைப் பகுதியில் 400 லிட்டர் கள்ள சாராய ஊறல் அழிப்பு
சேலம் மாவட்டம் பெரிய கல்வராயன் மலையில் 400 லிட்டர் கள்ளச்சாரயம் ஊறல் அழிப்பு. கருமந்துறை தனிப்படை போலீசார் அதிரடி நடவடிக்கை. சேலம் மாவட்டம் பெரிய கல்வராயன் மலை கரிய கோவில் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஆவரைப் பகுதியில் மர்ம நபர்களால் கள்ளச்சாயம் காய்ச்சப்படுவதாக கருமந்துறை போலீஸ்சாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி அதிரடி போலீசார் அங்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக 4,பிளாஸ்டிக் பேரல் 1 இரும்பு பேரல்களில் கள்ளச்சாராய ஊறல் இருந்ததை கண்டு பிடித்து அனைத்தையும் கீழே கொட்டி அழித்தனர். மேலும் சாராயம் காய்ச்சுவதற்காக போடப்பட்டிருந்த அடுப்பு ஆகியவற்றையும் உடைத்தனர். இதனை அடுத்து கரியகோவில் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கள்ள சாராயம் காய்ச்ச ஊறல் போட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.