அரசியல் விளம்பரங்கள் அழிப்பு: தொழிலாளர்கள் தீவிரம்
நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், அரசியல் விளம்பரங்கள் உள்ள சுவர்களுக்கு வண்ணம் பூசும் பணிகள் தீவிரம்.
By : King 24X7 News (B)
Update: 2024-03-17 09:15 GMT
இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதாகவும், தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக மார்ச் 20 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கப்பட்டு ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையர் நேற்று அறிவிப்பு வெளியிட்டார்.
அத்துடன் தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வருவதாக அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் நேற்று மாலை முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டதன் காரணமாக சென்னை முழுவதும் இருக்கக்கூடிய சுவர்களை அரசியல் கட்சி விளம்பரங்கள் பேனர்களை அகற்றுவதற்காக தேர்தல் அலுவலர் உத்தரவிட்டிருந்தார்.
அதன் அடிப்படையில் பணியாளர்கள் சென்னை அண்ணா சாலையில் உள்ள சுவர்களின் அரசியல் கட்சி விளம்பரங்களுக்கு வர்ணம் பூசும் பணிகளில் ஈடுபட்டனர்.