அதிமுக வேட்பாளரை கைது செய்ய வேண்டும் - ஈவிகேஎஸ் இளங்கோவன்
ஈரோடு அதிமுக வேட்பாளர் அசோக்குமார் 250 போலி கணக்குகளை உருவாக்கி அதன் மூலம் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய திட்டடுமிட்டுள்ளதால் அவரை கைது செய்ய வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.
ஈரோட்டிலுள்ள தனது வீட்டில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது தேர்தல் கமிஷன் மோடியின் கொத்தடிமையாக , கைப்பாவையாக செயல்படுவதாகவும் , அண்ணாமலை வேட்புமனுவில் பல்வேறு தவறுகள் இருந்தும் ஏற்றது என்றார். அதே போல் ஈரோட்டில் அதிமுக வேட்பாளர் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய புடவையை பதுக்கி , வாக்காளர்களுக்கு வழங்க இருந்த்து , அதை காவல்துறை கைப்பற்றி , அதிமுக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.
ஆனால் இதுவரை அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் இதே போல் அதிமுக வேட்பாளர் வங்கிகளில் 250 போலி கணக்குகளை ஆரம்பித்துள்ளதாகவும் அதன் மூலம் வாக்காளர்களுக்கு பணம் வழங்க உள்ளாதால் அவர் மீது தேர்தல் அதிகாரிகள் , வருமான வரித்துறை , அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து அதிமுக வேட்பாளர் கைது செய்ய வேண்டும் என்றார். ஜனநாயக விரோத போக்கை மோடி அன் கோ செய்து வருவதால் தேர்தலுக்கு பிறகு மோடி அன்கோ சிறை செல்வார்கள் என்றார்.