"2024 தேர்தலில் அடிமைகளின் எஜமானர்களையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும்" - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் திமுக சார்பில் நடைபெற்ற பொற்கிழி வழங்கும் விழாவில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.
By : King Editorial 24x7
Update: 2023-11-21 13:10 GMT
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சரளையில் ஈரோடு வடக்கு , தெற்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 2580 கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குதல் விழாவில் தமிழக இளைஞர் நலஅன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரும் கழக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பங்காற்றி பொற்கிழி வழங்கினார்.விழாவில் பேசிய அமைச்சர்உதயநிதி ஸ்டாலின் , தமிழ்நாட்டை பெரியார் மண் தான் என குறிப்பிடுகின்றனர்.அதற்கு காரணம் ஈரோடு மண் என்றார். பொற்கிழி வழங்குவது சாதாரண நிகழ்ச்சி கிடையாது.நான் உங்களிடம் ஆசிர்வாதம் வாங்க வந்துள்ளேன்.மூத்தவர்களிடம் வாழ்த்து பெறாமல் இளைஞர் அணி மாநாடு வெற்றி பெறாது. தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்று வருகிறோம்.. நிறைவேற்றிய திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் தமிழகத்தில் காலை உணவுத்திட்டத்தால் தினமும் 17 லட்ச மாணவர்கள் பயன் பெறுகின்றனர் என்றும், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அடிமைகளின் எஜமானர்களை வீட்டுக்கு அனுப்ப பாடுபட வேண்டுமெனவும் தெரிவித்தார்.