ஈரோடு எம்பி கணேசமூர்த்தி மறைவு - ஜவாஹிருல்லா இரங்கல்
ஈரோடு எம்பி கணேசமூர்த்தி மறைவுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா இரங்கல் தெரிவித்துள்ளார்.;
Update: 2024-03-28 08:03 GMT
ஜவாஹிருல்லா
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா எம் எல் ஏ வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைந்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் துயரம் அடைந்தேன். திராவிட இயக்க கொள்கையால் ஈர்க்கப்பட்டு களப்பணிகளில் முன்னணியில் இயங்கியவர். பொடா
வழக்கு பெற்று சிறை சென்று மீண்டவர். மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராக சிறப்பாக பணியாற்றியவர். ஈரோடு தொகுதியின் வளர்ச்சிக்கும் அரும்பாடு பட்டவர். அவருடைய மறைவு மிகப்பெரிய இழப்பு ஆகும். அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் மதிமுகவின் தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். என எம்.எச். ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.