"இடைநிற்றல் மாணவர்களை மீண்டும் பள்ளிகளுக்கு வரவைக்க வேண்டும்" - அமைச்சர் அன்பில் மகேஷ்

அரசுப் பள்ளிகளில் இடைநிற்றல் மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு வரவைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி வலியுறுத்தியுள்ளார்.

Update: 2023-11-21 13:29 GMT

ஈரோடு மாவட்ட அரசுப் பள்ளிகளில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ஈரோட்டில் அரசு பள்ளிகளில் முன்னறிவிப்பு இன்றி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பள்ளி வளாகம், வகுப்பறை, கழிப்பறை, குடிநீர் வசதி முறையாக உள்ளதா என்பது குறித்தும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்ட அவர், பள்ளிகளில் உள்ள குறைகள் குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தார்.

பள்ளியில் இருந்து இடைநிற்றல் மாணவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், புதுமையான முறையில் மீண்டும் அவர்களை பள்ளிகளுக்கு வரவைக்க வேண்டும் என்றும்  மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி கேட்டுக்கொண்டார். மேலும், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவியர் நூறு விழுக்காடு தேர்ச்சி பெற அனைவரும் உழைக்க வேண்டும் என்றும் அமைச்சர் அப்போது வலியுறுத்தினார்.  

Tags:    

Similar News