தேர்தல் ஜனநாயகத்தை நிலை நிறுத்த உரிய நடவடிக்கை முன்னாள் நீதிபதிகள்

தேர்தல் முடிவுகள் காரணமாக ஏதேனும் அரசியல் சாசன சிக்கல்கள் எழுந்தால் அதை சரி செய்ய ஐந்து நீதிபதிகள் நீதிமன்றத்தில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என குடியரசுத்தலைவர் , உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்டோருக்குஉயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் கடிதம் எழுதி உள்ளனர்.

Update: 2024-06-04 03:25 GMT

பைல் படம் 

தேர்தல் ஜனநாயகத்தை நிலை நிறுத்த உரிய நடவடிக்கை வேண்டுமென குடியரசுத்தலைவர் , உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்டோருக்கு உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகளான அக்பர் அலி, அருணா ஜெகதீசன், அரிபரந்தாமன், சிவக்குமார், செல்வம், விமலா மற்றும் பாட்னா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அஞ்சனா பிரகாஷ் ஆகியோர் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் மற்றும் தலைமை தேர்தல் ஆணையர் ராஜூவ் குமார் ஆகியோருக்கு கடிதம். ஒருவேளை தொங்கு நாடாளுமன்றம் அமைந்தால் குதிரை பேரம் உள்ளிட்ட அரசியல் சாசனத்திற்கு எதிரான நடவடிக்கைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென குடியரசுத்தலைவருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் காரணமாக ஏதேனும் அரசியல் சாசன சிக்கல்கள் எழுந்தால் அதை சரி செய்ய ஐந்து நீதிபதிகள் நீதிமன்றத்தில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

Tags:    

Similar News