ஈரோடு - திருநெல்வேலி ரயில் செங்கோட்டை வரை நீட்டிப்பு

ஈரோடு-திருநெல்வேலி முன்பதிவில்லா விரைவு ரயில், செங்கோட்டை வரை நீட்டிக்கப்படுவதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இதனால் தென் மாவட்ட மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Update: 2023-12-29 01:58 GMT

சேலம் சந்திப்பு 

சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட ஈரோட்டில் இருந்து திருநெல்வேலிக்கு தினசரி முன்பதிவில்லா விரைவு ரயில் (16845,16846) இருமார்க்கத்திலும் இயக்கப்பட்டு வருகிறது. ஈரோட்டில் மதியம் 2 மணிக்கு புறப்பட்டு திருநெல்வேலிக்கு இரவு 9.25 மணிக்கு சென்றடையும். மறு மார்க்கத்தில் திருநெல்வேலியில் காலை 6.40 மணிக்கு புறப்பட்டு, ஈரோட்டிற்கு மதியம் 3 மணிக்கு வந்து சேரும். இந்த ஈரோடு-திருநெல்வேலி முன்பதிவில்லா விரைவு ரயிலை, தென்காசி மாவட்டம் செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும் என தென் மாவட்ட பயணிகள் தொடர்ந்து ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து வந்தனர். கோரிக்கையை ரயில்வே வாரியம் ஏற்றுக் கொண்டு, ஈரோடு- திருநெல்வேலி தினசரி முன்பதிவில்லா விரைவு ரயிலை செங்கோட்டை வரை நீட்டிப்பதாக நேற்று அறிவிப்பு வெளியிட்டது. இதன் மூலம் இந்த ரயில், ஈரோடு-செங்கோட்டை முன்பதிவில்லா விரைவு ரயிலாக மாற்றம் பெறுகிறது.
Tags:    

Similar News