சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் பணம் கேட்டு மிரட்டல்

சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் பணம் கேட்டு மிரட்டல் விடுப்பதாக தொண்டு நிறுவனத்தினர் புகார் மனு அளித்தனர்.

Update: 2024-02-20 16:25 GMT

மனு அளித்தவர்கள்

அணுக்கிரஹா தொண்டு நிறுவனத்திடம் சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் பணம் கேட்டு மிரட்டுவதாக தொண்டு நிறுவன ஆதரவாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

நாகர்கோவிலை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் அனுகிரஹா தொண்டு நிறுவனம் சார்பில் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டச் சேர்ந்த மகளிர் குழு பெண்களுக்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் கடன் வழங்கப்பட்டு வந்துள்ளது. இந்த பணியில் ஏராளமான அனுக்கிரஹா தொண்டு நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக நாசரேத், திருச்செந்தூர், நெல்லை மாவட்டம் இடையன் காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மீனவப் பெண்கள் உள்ளிட்டோரிடம் கந்து வட்டிக்கு பணம் கொடுத்து வசூலித்து வந்த நபர்கள் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அனுக்கிரஹா நிறுவனத்தை தொடர்பு கொண்டு தூத்துக்குடி மாவட்டம், இடைச்சி விளையைச் சேர்ந்த சுந்தரவேல் மற்றும் மூக்குபீரியை சேர்ந்த ராம்குமார் ஆகியோர் சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதற்கு அனுக்கிரஹா தொண்டு நிறுவனம் அவர்களுக்கு எந்தவித பணத்தையும் அளிக்க மறுத்துள்ளது. இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுந்தரவேல் மற்றும் ராம்குமார் மகளிர் குழு பெண்கள் சிலருடன் அனுகிரஹாதொன்டு நிறுவனம் மகளிர்க்கு கடன் வழங்கிவிட்டு தொடர்ந்து அத்துமீறல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக புகார் அளித்தனர். இது தொடர்பாக அனுக்கிரஹா தொண்டு நிறுவன வழக்கறிஞர் ரமேஷ் கூறுகையில் "அனுக்கிரஹா தொண்டு நிறுவனம் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் முறையாக மகளிர் குழுக்களுக்கு கடன் வழங்கி வருகிறது. அந்தத் தொகையை மகளிரும் முறையாக திருப்பி செலுத்தி வருகின்றனர். சுந்தரவேல் மற்றும் ராம்குமார் ஆகியோர் சிலர் சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அதற்கு நிறுவனம் வழங்காததால் பொய் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில்,

அனுக்கிரஹ நிறுவனத்தின் மீது மோசடியாக புகார் அளித்துள்ளனர் என்றார் இதை தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அனுக்கிரஹா தொண்டு நிறுவன ஆதரவாளர்கள். ஆதரவு மகளிர் குழு பெண்கள் சுந்தரவேல் மற்றும் ராம்குமார் மீது புகார் அளித்தனர். தூத்துக்குடியில் ஒரு நிறுவனத்திற்கு எதிர்ப்பாகவும் ஆதரவாகவும் மகளிர் குழு பெண்கள் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News