ஆபாச செயலி மூலம் பணம், நகை பறிப்பு; ஏழு பேர் கைது

தூத்துக்குடியில் ஆபாச செயலி மூலம் வரவழைத்து மூன்று பேரிடம் பணம், செல்போன்களை பறித்த மோசடிக்கும்பலை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-01-20 02:35 GMT

பைல் படம்

தூத்துக்குடியில் மத்திய அரசு தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் 35 வயது நபர் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான ஆண்ட்ராய்டு செயலியில் தனது பெயரை பதிவு செய்துள்ளார். இதையடுத்து கடந்த வாரம் அவரிடம் பேசிய கும்பல் தூத்துக்குடி முத்தையாபுரம் காட்டுப்பகுதிக்கு அவரை வரவழைத்து செல்போன், பணம் மற்றும் ரூ.1லட்சம் பணத்தை கூகுள் பே மூலம் பறித்துள்ளது. 

இதுகுறித்து புகாரின் பேரில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியதில் திருப்பூர் விக்னேஷ் நகர் சார்லஸ் மகன் அஸ்வின் (20),  முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் மகன் மகராஜா என்கிற சுள்ளான் (21), மற்றும் 16 வயது சிறுவன் பணம், நகை பறித்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மூவரையும் போலீசார் கைது செய்தனர். இதுபோல் தூத்துக்குடி டவுன் பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர் சென்னையில் பணிபுரிந்து வருகிறார்.

அவரை இதே ஆப் மூலம் தொடர்பு கொண்ட கும்பல் தூத்துக்குடி பீச் ரோட்டில் உள்ள ஒரு ஷெட்டிற்கு வரவழைத்து அவரை தாக்கி செல்போன், பணத்தை பறித்துள்ளது. மேலும் விளாத்திகுளத்தைச் சேர்ந்த ஒருவரிடமும் இதுபோல் அந்த கும்பல் பணம் பறித்துள்ளது. இது தொடர்பாக 4 இளஞ்சிறார்களை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 2பேரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News