நோன்பு கஞ்சிக்கு கூடுதல் அரிசி - முதல்வரிடம் கோரிக்கை

ரமலான் மாத நோன்பு கஞ்சிக்கான அரிசியினை கூடுதலாக, உரிய நேரத்தில் வழங்க வேண்டும் என தமிழக முதல்வரிடம் தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளிவாசல்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.;

Update: 2024-03-03 04:43 GMT

முதல்வரிடம் கோரிக்கை 

ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சிக்கான (விலையில்லா) அரிசியினை தமிழக அரசு கடந்த வருடத்தைவிட அதிகமாகவும், தேர்தல் நடத்தை விதி விரைவில் அமலுக்கு வர இருப்பதால் காலதாமதமின்றி உரிய நேரத்திலும் வழங்க வேண்டும் என்று தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளிவாசல்கள் அசோசியேசன் தலைவர் செய்யது முஹம்மது கலீபா சாஹிப் காதிரி ஹாஷிமி மற்றும் செயலாளர் முஜம்மில் ஜாபர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்,

அதில் கூறப்பட்டுள்ளதாவது :- வருடா வருடம் தமிழக அரசு இஸ்லாமிய மக்களுக்காக புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சிக்கான (விலையில்லா) அரிசியினை பள்ளி வாசல்களுக்கும் தர்காக்களுக்கும் வழங்கி வருகிறது. இதனால் அரசிற்க்கு தமிழக இஸ்லாமிய மக்கள் மனதார நன்றி செலுத்தி வருகின்றனர்.  தமிழக பள்ளி வாசல்கள் தர்காக்களுக்கு நோன்பு காலங்களில் கஞ்சி காய்ச்ச தமிழக அரசு விலையில்லா அரிசி வழங்க உத்தரவிட்டு வருகிறது.

இதன் மூலம் பள்ளிவாசலில் நோன்பு திறக்கும் இஸ்லாமிய மற்றும் நோன்பு நோற்கும் பிற மதத்தினர்கள் பயன் பெற்றார்கள். இந்த வருடம் இதனை உயர்த்த வேண்டும் என தமிழக பள்ளிவாசல்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு கோரிக்கை வைத்திருந்தோம். அதனை இந்த வருடம் பரிசிலீப்பதாக தமிழக அரசிடமிருந்து பதில் வந்திருந்தது. தற்போது தமிழகத்தில் உள்ள பள்ளி வாசல்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு  தமிழக அரசு இதனை ‪6500‬ மெட்ரிக் டன்னாக உயர்த்த வேண்டும்.

மேலும் அந்தந்த மாவட்ட ஆட்சி நிர்வாகம் நோன்பு பிறைக்கு (மார்ச் 8க்கு) முன்பாகவே தமிழக அரசின் விலையில்லா அரிசியினை அந்தந்த உரிய பள்ளி வாசலுக்கும் உரிய தர்காவிற்க்கும் தைக்காலுக்கும் சேர்த்திட வேண்டும், இதன் மூலம் காலதாமதம் தவிர்க்கப்படும் மேலும் தற்போது விரைவில் பாரளுமன்ற தேர்தல் நடக்க இருப்பதால், தேர்தல் நடத்தை விதி அமலுக்கு விரைவில் வரலாம் அதனால் காலதாமதமின்றி உரிய நேரத்திலும் விலையில்லா அரிசிகள் டெலிவரி செய்யப்பட வேண்டும் ஆகவே தமிழக அரசு இந்த விஷயத்தில் கடந்த வருடத்தைவிட அதிகமாகவும் உரிய நேரத்திலும் வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசு இதற்கான ஆவணங்களை உடனே செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News