தமிழ்நாட்டில் தீவிர வெப்ப அலை - வானிலை மையத்தின் தலைவர் மொஹபத்ரா
Update: 2024-04-25 09:37 GMT
வெப்ப அலை
எப்போதும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் தீவிர வெப்ப அலை நிலவுகிறது என இந்திய வானிலை மையத்தின் தலைவர் மொஹபத்ரா தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், ''தமிழ்நாட்டில் தீவிர வெப்ப அலை நிலவுவது தொடர்பாக தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளோம்.
தமிழகத்தின் தற்போதைய நிலைக்கு "Hot and humidity weather" என பெயரிட்டுள்ளோம்.
முன்பெல்லாம் 35 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருந்தால் அசவுகரியம் இருக்காது.
தற்போது 35 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை நம்மால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு வெப்பநிலை உணரப்பட காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதே காரணம்.'' என தெரிவித்துள்ளார்.
மேலும் ஏப்ரல் 29-ம் தேதி வரை தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.