கள்ளச்சாராயம் விவகாரம் :சட்டப்பேரவையில் இருந்து பாஜக வெளிநடப்பு

இறந்த உயிர்களை பற்றி வருத்தபடாமல் திமுக கூட்டணி கட்சி தோழர்கள் இதுபோன்று நடத்த சம்பத்தை ஒப்பிட்டு நியாயப்படுத்துவதாக பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கூறினார்.

Update: 2024-06-22 02:00 GMT

கள்ளச்சாராய விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க திமுக அரசு தவறிவிட்டதாக கூறி பாஜகவினர் வெளிநடப்பு செய்தனர்.


சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற சட்டபேரவை கூட்டத்தொடரில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் மீதான விவாதத்தின் போது கள்ளச்சாராய விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க திமுக அரசு தவறிவிட்டதாக கூறி பாஜகவினர் வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசு ஆட்சி பொறுப்பு ஏற்று 3 ஆண்டுகள் ஆகியுள்ளது. இது வரை விஷ சாரயத்தால் இரண்டு ஆண்டுகளில் 70 பேர் இறந்துள்ளனர்.

ஜாபர் சாதிக் விவகாரம் கூட நடந்தது இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.இவற்றை எல்லாம் கட்டுபடத்தியாக வேண்டும். ஏற்கனவே இந்த சம்பவங்கள் நடந்துள்ளது அதற்காக திமுக வின் கூட்டணி கட்சி தோழர்கள் இப்போதும் நடக்கிறது என்று நியாயப்படுத்துகிறார்கள் . பாமக கருப்பு சட்டை அணிந்து வந்து எதிர்ப்பு தெரிவித்தது நீங்கள் கருப்பு சட்டை அணியவில்லை என்ற கேள்விக்கு, என்னிடம் கருப்பு சட்டை இல்லை, அதனால் போடவில்லை என்றார்.

Tags:    

Similar News