மேட்டூர் அணையில் நீர்மட்டம் சரிவு - வெளியே தெரியும் நந்தி சிலை

மேட்டூர் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதால் அணையில் மூழ்கியிருந்த நந்தி சிலை, கிறிஸ்துவ தேவாலயம் ஆகியவை முழுமையாக வெளியே தெரிகின்றன.

Update: 2024-04-23 06:18 GMT

 நந்தி சிலை

மேட்டூர் அணையின் மொத்த நீர் தேக்க உயரம் 120 அடி, மொத்த நீர் இருப்பு 93.47 டிஎம்சி,யாகும். மேட்டூர் அணை கட்டுவதற்கு முன்பு பண்ணவாடி, கோட்டையூர் பகுதியில் வாழ்ந்து வந்த கிராம மக்கள் பல்வேறு கோவில்களை கட்டி வழிபாடு நடத்தி வந்தனர். அணை கட்டி முடிக்கப்பட்ட பிறகு கிராம மக்கள் வேறு  இடத்திற்கு குடி பெயர்ந்தனர்.

120 அடி கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70 அடிக்கு கீழ் குறையும் போது பண்ண வாடி நீர்த்தேக்க பகுதியில் மூலிகை இருக்கும் நந்தி சிலையின் தலைப்பகுதி, கிறில்துவ ஆலயத்தின் முகப்பு பகுதி வெளியே தெரிவது வழக்கம். இந்நிலையில் நீர்மட்டம்  தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்துவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது. மேலும் நீரில் மூழ்கி இருந்த ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் கோபுரத்தில் மேல் பகுதி  நீருக்கு வெளியே தெரிய தொடங்கியது.

இதனை சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் பரிசல் மூலம் சென்று வழிபாடு செய்து வருகின்றனர். இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 54.66 அடியாகவும், நீர் இருப்பு 20.87 டி.எம்.சி,யாகவும் உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,200 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

Tags:    

Similar News